அதிமுக பொதுக்குழு கூட்டம்!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இன்று (டிசம்பர் 15) காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம்!
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
புதிய அமைச்சரவை பதவியேற்பு!
மஹாராஷ்டிரா புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 21 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 12 பேரும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 10 பேரும் இன்று நாக்பூரில் பதவியேற்க உள்ளனர்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா வருகிறார் ஏகேடி
இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகை தர உள்ளார்.
வியட்நாம் செல்லும் எம்.எல்.ஏக்கள்!
நட்புறவு திருவிழாவில் பங்கேற்பதற்காக 35 பேர் கொண்ட எம்எல்ஏக்கள் குழு இன்று வியட்நாம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
தூத்துக்குடி விமான சேவை ரத்து!
மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்கு வரவேண்டாம்!
பிரதான சாலைகளில் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்று வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது!
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் கபா டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதையொட்டி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க!
டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு… இரண்டாவது இடைத் தேர்தல்- திமுகவில் தொடங்கிய ஆலோசனை!