தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 8) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக மனித சங்கிலி போராட்டம்!
திருப்பூர் அண்ணா நகரில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10:30 மணி முதல் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
போரட்டம் தொடர்கிறது!
கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதிக்கேட்டும், பணிப் பாதுகாப்புக் கோரியும் நான்காவது நாளாக கொல்கத்தா இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று மேற்கொள்கின்றனர்.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் முடிவு?
சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், முடிவு இன்று தெரியும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
10 மாவட்டங்களில் கனமழை!
தமிழகம் முழுவதும் இன்று முதல் 13ஆம் தேதி வரை திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பூங்காவை பார்வையிட அனுமதி!
சென்னை தேனாம்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கருட சேவை!
திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடைபெறுகிறது.
இமேக்ஸ் 7 அறிமுகம்!
பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி இந்தியா தனது புதிய காரான இமேக்ஸ் 7 ஐ இன்று அறிமுகப்படுத்துகிறது.
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மோதல்!
மகளிர் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி – நியூசிலாந்து அணி இடையிலான ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…