அயலகத் தமிழர் தின விழாவில் ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம் 2025 கண்காட்சி மற்றும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) நிறைவுரையாற்றுகிறார்.
பொங்கல் விழாவில் உதயநிதி!
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு, சமத்துவ பொங்கல் விழா இன்று காலை 10 மணி அளவில் இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
‘விக்சித் பாரத்’ இளம் தலைவா்களுடன் மோடி
‘விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில்’ பங்கேற்பாளா்களுடன் பிரதமா் மோடி இன்று முழு நாளையும் செலவிடுகிறாா்.
டெல்லியில் ராகுல்காந்தி பிரச்சாரம்!
சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்!
மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
மூணாறில் ஹங்கேரி பிரதமர்
ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் பிரதமராக 2010ல் இருந்து பதவி வகித்து வரும் விக்டர் ஓர்பன் தற்போது, கேரளாவில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இன்று மூணாறுக்கு செல்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபனில் இன்று…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மெல்பேர்ன் பார்க்கில் இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்.
இந்தியா – இங்கிலாந்து போட்டி டிக்கெட் விற்பனை!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே வரும் 25ம் தேதி சென்னையில் நடக்கும் 2வது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ‘District by Zomoto’ என்ற செல்போன் செயலி மூலமாகவோ அல்லது http://district.in என்ற இணையதளம் மூலமாகவோ வாங்கலாம்.
இன்று முதல் மழை பெய்யும்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவாட்டங்களில் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.92க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… எல்லாருக்கும் ஏற்றதா ஆஃப் பாயில்?