டாப் 10 நியூஸ் : சபாநாயகர் தேர்தல் முதல் ஆளுநரின் டெல்லி பயணம் வரை!

Published On:

| By christopher

மக்களவை சபாநாயகர் தேர்தல்!

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று (ஜூன் 26) நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.

அனைவரும் தவறாமல் பங்கேற்க உத்தரவு!

சபாநாயகர் தேர்தலையொட்டி இன்று நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி வழக்கில் இன்று விசாரணை!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பாமகவின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஆளுநர் டெல்லி செல்கிறார்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக மனு அளித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணியளவில் டெல்லி செல்கிறார்.

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்!

மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு இன்று முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெட்ரோலை தொடர்ந்து பால் விலை உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்படும் நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அம்மாநிலத்தில் அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.

புதிய தொலைத்தொடர்பு சட்டம் அமல்!

1, 2, 10 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உள்பட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை!

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 மாவட்டங்களில் விடுமுறை!

தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும், நீலகிரி மாவட்டத்திற்கு கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களிலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக இரு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

யுவனின் அடுத்த சிங்கிள்?

யுவன் சங்கர் ராஜா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அடுத்த சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் மசாலா பக்கோடா

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share