ராகுல், கார்கே ஜம்மு காஷ்மீருக்கு பயணம்!
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 21) ஜம்மு காஷ்மீர் செல்கின்றனர்.
ரூ.51,000 கோடி முதலீட்டு திட்டங்கள்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், ரூ.51,000 கோடி முதலீட்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு : இன்று பந்த்!
எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இடஒதுக்கீடு பச்சாவோ சங்கர்ஷ் சமிதி (Reservation Bachao Sangharsh Samiti) என்ற அமைப்பு ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
5 மாவட்டங்களில் கனமழை!
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
உலக முதியோர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான பொதுப் பிரிவில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் 27ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இன்று கடைசி நாள்!
பொதுத்துறை வங்கியில் உள்ள 4,455 துணை மேலாளர் (Probationary Officer) பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
துபாயில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!
மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக இன்று துபாயில் அமீரக திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.
உசுரே நீதானே பாடல் ரிலீஸ்!
நடிகர் தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘அடங்காத அசுரன்’ வீடியோ பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா போராட்டத்தில் கங்குலி!
கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி தனது மனைவியுடன் போராட்டத்தில் பங்கேற்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…