வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 1) வயநாடு செல்கின்றனர்.
யுபிஎஸ்சி புதிய தலைவர் பதவியேற்பு!
யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டேக் – இன்று முதல் அமல்!
வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் அவை நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
நீலகிரி, கோவையில் கனமழை!
நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை!
கேரளாவில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், பாலக்கோடு, கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
புதிய மேம்பாலம் திறப்பு!
பெருங்களத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் இன்று திறக்கப்பட உள்ளது.
கேரளா அனைத்துக் கட்சிக் கூட்டம்!
வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்க, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு கேரள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டம்!
நடிகர்களின் சம்பளம் குறைப்பு, தயாரிப்பு செலவை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 137-வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…