டாப் 10 நியூஸ் : மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை!

Published On:

| By christopher

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா!

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட (1937) மசோதா இன்று (ஜூலை 29) தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜேடியு தேசிய செயற்குழுக் கூட்டம்!

டெல்லியில் உள்ள பிகார் முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஜேடியு கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம்  இன்று நடைபெறுகிறது.

பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்த சட்டத் திருத்தம்!

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்த சட்டத் திருத்தம் சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட உள்ளது.

பைனலில் இந்தியா –  தென்ஆப்பிரிக்கா!

பார்படாஸில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத இந்தியா –  தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேர்வு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2,104 பணியிடங்களுக்காக இன்று நடைபெறும் தேர்வினை 1 லட்சத்து ஆயிரத்து 85 பேர் எழுத உள்ளனர்.

இன்று பள்ளிகள் உண்டு!

இந்தாண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதன் காரணமாக, அதனை ஈடுகட்ட  இன்று (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேகதாது திட்டத்திற்கு அனுமதி?

மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று சந்திக்க உள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய இரண்டு தாலுகாக்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் இன்று!

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 105வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா : கார்ன் கபாப்

டிஜிட்டல் திண்ணை: மத்தவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கள்ளக்குறிச்சி செல்வதற்கு முன்… ஸ்டாலின் செய்யும் ‘சட்ட’மன்ற சம்பவம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share