புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்!
புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
தனி கல்விக்கொள்கை அறிக்கை தாக்கல்!
தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் இன்று வழங்க உள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை!
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தீபாவளி டிக்கெட் முன்பதிவு!
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி பயணிக்க விருப்பமுள்ளவர்கள் இன்று புக்கிங் செய்து கொள்ளலாம்.
வீடுதோறும் ORS பவுடர்!
சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் குடிநீர் அருந்தி உயிரிழந்ததன் எதிரொலியாக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்பட உள்ளது.
சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது கேஸ் சிலிண்டர் விலை 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் 2 பாடல் வீடியோ ரிலீஸ்!
இந்தியன் 2 படத்தின் பாடலான காலண்டர் பாடலின் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிஜி – நீட் தேர்வுக்கான புதிய தேதி!
முதுநிலை நீட் தேர்வுக்கான புதிய தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் ஆரம்பம்!
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல் தனது முதல் சுற்றில் 53-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் இன்று மோதுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…