1563 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு இன்று (ஜூன் 23) மறுதேர்வு நடைபெறுகிறது.
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!
இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவை முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!
கோவை அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி இரயில்வே மேம்பாலம் அருகே இன்று முதல் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் தினம்!
1894 ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழு நிறுவப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவை சாய்க்குமா ஆப்கான்?
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில் இன்று காலை நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
சினேகன் பிறந்தநாள்!
அரசியல்வாதி பாடலாசிரியர் நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்ட கவிஞர் சினேகன் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
GOAT பாடல் டிரெண்டிங்கில் முதலிடம்!
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு வெளியான GOAT படத்தின் 2வது சிங்கிளான ’சின்ன சின்ன கண்கள்’ பாடல் இதுவரை 31 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவுக்கு சிவப்பு எச்சரிக்கை!
கேரளத்தில் அதி கனமழை பெய்து வருவதையடுத்து கோழிக்கோடு மற்றும் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 99-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!