முரசொலி செல்வம் இறுதி நிகழ்வுகள்!
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வத்தின் இறுதி நிகழ்வுகள் சென்னை பெசன்ட் நகரிலுள்ள மயானத்தில் இன்று (அக்டோபர் 11) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள்!
சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சை டூ தாம்பரம் சிறப்பு ரயில்!
சரஸ்வதி பூஜையை ஒட்டி தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இரவு 11.55 மணிக்கு செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் வழியே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ பணி காரணமாக கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
போப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு!
உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி இன்று திருத்தந்தை பிரான்சிஸை மூன்றாம் முறையாக வத்திக்கானில் சந்திக்க உள்ளார்.
போக்குவரத்து மாற்றம்!
திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள பழைய ரயில்வே பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைப்பதற்காக அவ்வழியேயான வாகனப் போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படவுள்ளது.
ஓடிடியில் வாழை திரைப்படம்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் disney plus ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேசிப்பாயா ஃபர்ஸ்ட் சிங்கிள்!
மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் ‘தொலைஞ்ச மனசு’ என்ற முதல் பாடல் இன்று வெளியாகிறது.
பிளாக் திரைப்படம் ரீலிஸ்!
இயக்குநர் பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Black திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…