காஷ்மீரில் மோடி பேரணி!
ஜம்மு காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பேரணி நடத்தி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
நேற்று பேஜர், இன்று வாக்கி-டாக்கீஸ்!
லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி-டாக்கீஸ் அடுத்தடுத்து வெடித்து 14 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கடைசி நாள்!
2024-2025-ம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கங்குவா அப்டேட்!
சூர்யா கங்குவா படத்தின் அப்டேட் இன்று வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி!
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு போடப்படும்.
முதல் டெஸ்ட் டிக்கெட் விற்பனை!
இந்தியா – வங்கதேச அணிகள் மோதவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ஆக்கி முருகப்பா தங்கக் கோப்பை!
எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 95-வது அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.
7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் அதிகரிக்கும்!
தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்
டிஜிட்டல் திண்ணை: செப்டம்பர் 20 வெள்ளி… உதயநிதி உயர்வுக்கு தேதி குறித்த பின்னணி!