டாப் 10 நியூஸ் : ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!

Published On:

| By christopher

Top 10 News: From military recruitment camps to school and college holidays!

இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்!

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று (நவம்பர் 4) முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் துவங்குகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் – காட்டாங்குளத்தூர் சிறப்பு மின்சார ரயில்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே இன்று சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றுமுதல் 9 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரி மகா ஆரத்தி பெருவிழா!

அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில், கரூர் காவிரி குடும்பம், கரூர் அனைத்து ஆன்மிக அமைப்புகள் சார்பில் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் காவிரி படித்துறையில் இன்று மாலை 6 மணியளவில் காவிரி மகா ஆரத்தி பெருவிழா நடைபெறுகிறது.

முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை-ஜாம்ஷெட்பூர் மோதல்!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதுகின்றன.

செஸ் போட்டி – டிக்கெட் விற்பனை!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நாளை தொடங்கும் நிலையில் இன்று ‘புக் மை ஷோ’ இணையதளத்தில் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஜான் பேபி  டீசர் ரிலீஸ்!

இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் தயாரித்துள்ள ஜான் பேபி திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 232வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புலாவ்

டிஜிட்டல்  திண்ணை:  எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share