கிருஷ்ண ஜெயந்தி!
இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்ததை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 26) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மெட்ரோ சேவையில் மாற்றம்!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திங்கட் கிழமையான இன்று சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில் இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
பங்குச்சந்தைகள் செயல்படும்!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பெண்கள் சமத்துவ நாள்!
பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாள் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 26-ஆம் தேதி உலக பெண்கள் சமத்துவ நாள் என்றுக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க பிறந்த நாள்!
தன் எழுத்துகளால் தேசபக்திக் கனலை மூட்டியவர், மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்ததினம் இன்று.
சுற்றுலா விருது – கால அவகாசம் நிறைவு!
தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது என மாநில சுற்றுலாத் துறை ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநருமான சி.சமயமூர்த்தி அறிவித்துள்ளார்.
விதிமீறல் பேனர்கள் அகற்றம்!
சென்னையில் உள்ள விதிமீறல் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், இன்று முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 162வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் ரூ. 92.34 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?