நவராத்திரி விழா தொடக்கம்!
நாடு முழுவதும் அக்டோபர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று (அக்டோபர் 3) முதல் தொடங்குகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்!
ஈரானின் தாக்குதலை அடுத்து லெபனான் மீது தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்!
தாம்பரம்-ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.
புத்தக திருவிழா தொடக்கம்!
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில், கரூர் பிரேம் மஹாலில் இன்று மாலை 4 மணிக்கு புத்தக திருவிழா தொடங்குகிறது.
இலங்கைக்கு தோணி போக்குவரத்து!
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு-இலங்கைக்கு இன்று முதல் தோணி போக்குவரத்து சரக்கு ஏற்றும் பணி தொடங்குகிறது.
இன்றே கடைசி நாள்!
நாடு முழுவதுமுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
மகளிர் டி20 உலகக்கோப்பை!
இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகள் பங்கேற்கும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்று ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கவுள்ளது.
தி கோட் ஓடிடி வெளியீடு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
18 மாவட்டங்களில் கனமழை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 200-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.