டாப் 10 நியூஸ் : அரியானா சட்டமன்ற தேர்தல் முதல் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வரை!

Published On:

| By christopher

Top 10 News: From financial release to farmers to Samsung workers strike!

அரியானா சட்டமன்ற தேர்தல்!

அரியானா மாநிலத்தில் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடும் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று (அக்டோபர் 5) காலை 7 மணி முதல் 6 மணி வரை தேர்தல் நடக்கிறது. பதிவான வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்படுகின்றன.

18-வது தவணையாக விவசாயிகளுக்கு நிதி!

பி.எம்.கிசான் திட்டத்தின் 18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை இன்று மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

முதல் சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கி வைக்கிறார் மோடி

மும்பையில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் – ஆரே ஜேவிஎல்ஆர் பிரிவு இடையே நகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

13 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கூடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது!

தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்றும், நாளையும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் (www.passportindia.gov.in) இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்!

ஜம்மு காஷ்மீர், அரியானா சட்டமன்ற தேர்தல் நிறைவு பெறுவதை தொடர்ந்து இன்று மாலை இரு மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

தளபதி 69 ஷூட்டிங் ஆரம்பம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என படத்தை தயாரிக்கும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக வணிகர் வீதியில் இன்று சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த உள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 202-வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய போட்டியில் மோதுவது யார்?

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மாலை 3.30 மணிக்கு ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளும், இரவு 7.30 மணிக்கு வங்கதேசம் – இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : நவதானிய சுண்டல்

மறுபடியும் தாத்தா வாராறா? – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share