6 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லுக்கு செல்லும் உதயநிதி
நத்தம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லுக்கு செல்கிறார்.
திருநெல்வேலியில் எடப்பாடி
அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் அதிமுகவின் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலி செல்கிறார்.
கண் மருத்துவமனை திறக்கிறார் மோடி
பிரதமர் மோடி இன்று வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டு மதியம் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு!
பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்து விழா உரையாற்றுகிறார்.
வீராணம் ஏரி திறப்பு?
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இன்று தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 217-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும். டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் சாம்பியன் பட்டம் வெல்வது யார்?
மகளிர் டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.
வெற்றி பெறுமா மழை?
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று ஐந்தாவது நாள் போட்டி நடைபெறுகிறது. தற்போது நியூசிலாந்து அணியின் கைவசம் 10 விக்கெட் இருக்க வெற்றிக்கு 107 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தநிலையில் இன்று பெங்களூருவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!
டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!