டாப் 10 நியூஸ் : திமுக முப்பெரும் விழா முதல் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா வரை!

Published On:

| By christopher

Top 10 News : From DMK Triennial Celebration to Arvind Kejriwal's Resignation!

பெரியார் பிறந்தநாள்!

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 146வது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 17) தமிழகம் முழுவதும் “சமூகநீதி நாள்” ஆக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

திமுக முப்பெரும் விழா!

திமுக சார்பில் வருடந்தோறும் நடக்கும் முப்பெரும் விழாவோடு இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவள விழா கொண்டாட்டமும் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார்.

ADVERTISEMENT

எச். ராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தியை தொடர்ந்து அநாகரீகமாக பேசிவரும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் சென்னை வருகை!

தமிழகத்தில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்று, நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட சிதம்பரம் பகுதியை சேர்ந்த 30 பேரில் 10 பேர் இன்று ஊர் திரும்புகின்றனர். மற்ற 20 பேர் நாளை திரும்புகிறார்கள்.

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில், பேருந்துகள்!

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு, இன்று பயணியர் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு!

மணிப்பூர் கலவரம் காரணமாக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் அது தளர்த்தப்பட்டு அங்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

மிலாடி நபி விடுமுறை!

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகையான மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவை எதிர்கொள்கிறது இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது இந்தியா அணி!

12 மாவட்டங்களில் வெயில்!

மேற்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வழக்கத்தைவிட இன்று 12 மாவட்டங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கோதுமை இட்லி

அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆ.ராசா கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share