டானா புயல் கரை கடந்தது!
மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த “டானா புயல்”, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பிதர்கனிகா மற்றும் தாமரா அருகே மிகத்தீவிர புயலாக இன்று (அக்டோபர் 25) அதிகாலை கரையைக் கடந்தது.
சோதனை நிறைவு!
முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று அதிகாலை 1.30 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
19 மாவட்டங்களில் கனமழை!
வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் ‘அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத பணம் வழங்கப்படும்!
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாத அரிசிக்கான பணம் மக்கள் வங்கி கணக்கில் நாளை வரவு வைக்கப்படும் என புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.
புருலியா-நெல்லை ரயில் ரத்து!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றே கடைசி நாள்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஜெர்மன் மொழி இலவசமாக கற்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி.
6 தமிழ் படங்கள் ரிலீஸ்!
இந்த வாரம் பிரபல ஓடிடி தளத்தில் மெய்யழகன், கடைசி உலகப் போர், ஐந்தாம் வேதம் உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் இன்று ரிலீசாகின்றன.
இந்தியா பேட்டிங்!
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் புனேயில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 222வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும் டீசல் ரூ. 92.34க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…