பாஜக ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக கட்சி சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் , திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மரணம் அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 54ஆக உயர்ந்துள்ளது.
விஜய் 50வது பிறந்தநாள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு பாராட்டு விழா!
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு அம்மாநில பாஜக சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்தியா – பங்களாதேஷ் மோதல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஆன்டிகுவா சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
ரஷ்யா உயர்க்கல்வி கண்காட்சி!
ரஷ்யாவில் உயர்க்கல்வி பயில்வது தொடர்பான 2ம் கட்ட கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
நடிகை தேவயானி பிறந்தநாள்!
90-களில் வந்த பெரும்பாலான குடும்ப படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் குடி கொண்ட நாயகியான நடிகை தேவயானி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
GOAT இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி GOAT படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 98-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…