டாப் 10 நியூஸ் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் வரை!

Published On:

| By christopher

பொங்கல் திருநாள்!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல்நாளான இன்று (ஜனவரி 14) பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!

புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி மொழியுடன் தொடங்குகிறது.

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகை – கேரளாவில் விடுமுறை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தை ஒட்டியுள்ள கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று கேரள அரசு விடுமுறை அளித்துள்ளது.

ADVERTISEMENT

3 மாவட்டங்களுக்கு கனமழை!

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு!

திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்ரீரங்கம், மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறை தினமான இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகர விளக்கு பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நாளை மாலை 6.30 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆம் தேதிகளில் ஞாயிறு நேர அட்டவணையின் படியும், 17 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மின்சார ரயில் சேவை எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்.

ஜெயிலர் 2 இன்று வருகிறது!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, ரஜினிகாந்த் நடித்து 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.

சர்வதேச பலூன் திருவிழா!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று முதல் சர்வதேச பலூன் திருவிழா 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொங்கல் ரிலீஸ்!

இந்தாண்டு பொங்கல் ரிலீஸாக ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’, ஆகாஷ் முரளி நடித்துள்ள ‘நேசிப்பாயா’, கிஷன் தாஸ் நடித்துள்ள ‘தருணம்’ ஆகிய 3 படங்கள் இன்று திரைக்கு வருகின்றன.

கிச்சன் கீர்த்தனா : தால் வடா

இனிமே நான் இப்படித்தான்… ஜெயம் ரவி எடுத்த திடீர் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share