சட்டப்பேரவை கூடுகிறது!
தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜூன் 20) தொடங்குகிறது.
கள்ளச்சாராயம் மரணம் – முதல்வர் ஆலோசனை!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
ஜெய்சங்கர் இலங்கை செல்கிறார்!
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பதவியேற்ற 10 நாட்களே ஆன நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை செல்கிறார்.
நீட் முறைகேடு : காங்கிரஸ் போராட்டம்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது.
நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
நாகப்பட்டினம் நாகூர் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பார்படாஸ் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.
விற்பனைக்கு வரும் சியோமி 14 சிவி!
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 14 சிவி (Xiaomi 14 CIVI) போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.
பயமறியா பிரம்மை பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
ராகுல் கபாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பயமறியா பிரம்மை’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 95வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : முளைகட்டிய கொள்ளு காய்கறி சாலட்
“கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழப்பு” அமைச்சர் எ.வ.வேலு தகவல்!