டாப் 10 நியூஸ் : புதிய ஆளுநர்கள் நியமனம் முதல் தனுஷ் பிறந்தநாள் வரை!

Published On:

| By christopher

புதிய ஆளுநர்கள் நியமனம்!

ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூலை 28) நியமித்துள்ளார்.

புறநகர் ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெறுகிறது!

சென்னை அண்ணாநகர் 2-வது நிழற்சாலையில் இன்று ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டும் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா, பிவானி மற்றும் ரோஹ்தக்கில் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இன்றே கடைசி நாள்!

வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்காக ஐபிபிஎஸ் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பன்வாருக்கு மீண்டும் வாய்ப்பு!

ஒலிம்பிக்கில் ரோவிங் போட்டியில் 4ஆவது இடம் பிடித்து நேரடி காலிறுதி வாய்ப்பை இழந்த பால்ராஜ் பன்வாருக்கு இன்று மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீலகிரி, கோவையில் கனமழை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீன்வளத்துறை எச்சரிக்கை!

தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 65 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 133வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?

டிஜிட்டல் திண்ணை: பட்ஜெட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்- ஸ்டாலின், அமைச்சர்கள் ஆப்சென்ட் ஏன்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share