டாப் 10 நியூஸ் : அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல் ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் வரை!

Published On:

| By christopher

அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

உலக பாரம்பரியக் குழு கூட்டம் தொடக்கம்!

உலக பாரம்பரியக் குழு கூட்டத்தை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. அதன்படி இன்று உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வை பிரதமர் நரேந்திர மோடி மாலை 7 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.

இடைநிலை ஆசிரியர் பணி எழுத்துத்தேர்வு!

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.

கோயில் சொத்துக்களை பாதுகாக்கக்கோரி போராட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இன்று கடைசி நாள்!

நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ அல்லாத பொதுத்துறை வங்கிகளில் உள்ள 6,124 கிளார்க் (எழுத்தர்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர்!

ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடரின் 2-வது கட்ட போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபு சரோவர் ஓட்டலில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து!

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 6 மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 6 நாட்களுக்கு மழை!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் இன்று (ஜூலை 21) முதல் 26-ம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 126வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ. 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா – யூஏஇ மோதல்!

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் யூஏஇ அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

கிறிஸ்டோபர் ஜெமா

சண்டே ஸ்பெஷல்: இடியாப்பம்… இப்படிச் செய்து பாருங்கள்… ஈஸியா வரும்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன?  போட்டுடைத்த நத்தம், வேலுமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share