விமானப்படை சாகச நிகழ்ச்சி!
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என 2 மணி நேரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
சாம்சங் – அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை அடுத்து முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்!
‘சைக்ளோத்தான் 2024’ போட்டியை முன்னிட்டு இன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது!
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் இணையதள சேவையானது இன்று இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளாா்.
சிறப்பு வரிவசூல் முகாம்!
சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு வரிவசூல் முகாம்களை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
நாய்க்குட்டி தத்தெடுப்பு முகாம்!
திருப்பூர் நகரின் இதயமாக விளங்கும் பார்க் ரோட்டில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச நாட்டு நாய்க்குட்டி தத்தெடுப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா மகளிர் அணி!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது.
பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பம்!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் 8 சீசன் தொடக்க விழா நிகழ்ச்சியானது விஜய் டிவியில் இன்று மாலை 6 மணி முதல் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஒளிபரப்பாக உள்ளது.
இந்தியா – வங்கதேசம் முதல் டி20 போட்டி!
இந்தியா – வங்கதேசம் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 தொடர் இன்று இரவு 7 மணிக்கு குவாலியரில் நடைபெறுகிறது.
17 மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளைப் பயன்படுத்துவது எப்படி?