டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

திட்டப்பணிகள் துவக்க நிகழ்ச்சி!

மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 18) ரூ.6,800 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

அன்பழகன் நூற்றாண்டு விழா!

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் பெருவிழா!

சென்னை கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் அரங்கத்தில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

சிவாஜி கணேசன் புத்தக வெளியீடு!

சென்னை சின்மயா அரங்கில் முனைவர் மருதுமோகன் எழுதிய சிவாஜி கணேசன் புத்தகத்தை இசைஞானி இளையராஜா இன்று வெளியிடுகிறார்.

துணிவு இரண்டாவது பாடல்!

துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காசே தான் கடவுளடா என்ற இரண்டாவது பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.

மலை ரயில் ரத்து!

தொடர் மழை காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக கோப்பை இறுதிப்போட்டி!

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இன்று பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

மநீம மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மதியம் 12 மணியளவில் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 211-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மர்மகோவா போர்க்கப்பல்!

மும்பையில் இன்று அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்படையில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சேர்க்கிறார்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் சுலபமாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலாம்!

இரண்டு நாட்களில் அமைச்சரவை கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share