டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

இந்தி திணிப்பு பொதுக்கூட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 4) திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு!

கேரள மாநிலம் கொச்சியில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு மற்றும் கண்காட்சி 2022 நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

ராகுல் நடைபயணம் ஓய்வு!

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் இன்று ஒரு நாள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கன மழை விடுமுறை!

கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவள்ளூரில் நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கும், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின் தடை!

பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் இன்று தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது ‌‌

புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் இன்று திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 167-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ‌.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக கோப்பை போட்டி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும், மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதுகின்றன.

காபி வித் காதல்!

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடித்த காபி வித் காதல் திரைப்படம் இன்று வெளியாகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று சென்னை மற்றும் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

’அரபிக் குத்து’ பாடலுக்கு ஆட்டம் போட்ட தாத்தா: வைரலான வீடியோ!

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்திய அணிக்கு சிக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share