டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க…

Published On:

| By christopher

ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி!

நாட்டின் உச் சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இன்று ( ஆகஸ்ட் 26) ஓய்வு பெற உள்ளார். அதேசமயத்தில் பில்கிஸ் பானு, பெகாசஸ் உளவு உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

தமிழ் தென்றல் திரு.வி.க 139வது பிறந்தநாள்!

தமிழ்த்தென்றல் என அனைவராலும் போற்றப்படும் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 139ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, மதுரவாயல் வட்டத்தில் அவர் பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

பாஜக பேரம் – டெல்லியில் சிறப்புக் கூட்டம்!

டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. தங்களது எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 97வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35, 65,562 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 675 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் 5,496 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஹத்ராஸ் : பத்திரிக்கையாளர் ஜாமீன் மனு விசாரணை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பலாத்கார சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

டிவிட்டர் இந்தியா – நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை!

ட்விட்டர் இந்தியா நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற நிலைக்குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் ராஜாத்தி அம்மாள்!

முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவி ராஜாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். அவருக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக இன்று இரவு ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், மகள் கனிமொழி உள்ளிட்டோர் செல்கின்றனர்.

கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இன்று ரிலீசாகும் படங்கள்!

இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள் நிதி நடித்துள்ள ‘டைரி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரத்திஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ‘தீர்ப்பு’ என்ற மலையாள திரைப்படம் மற்றும் சஞ்சிதா பூனாச்சா நடிப்பில் களாபுரம் என்ற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஹாலிவுட்டில், ‘த்ரி தௌசண்ட் இயர்ஸ் ஆஃப் லாங்கிங்’, ‘டிராகன் பால் சூப்பர்: சூப்பர் ஹீரோ என்ற இரு திரைப்படங்களும் இன்று வெளியாகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள மேதகு திரைப்படத்தின் இரண்டாம் பாகம், இன்று நண்பகல் 12 மணிக்கு ஓடிடியில் வெளியாகிறது.

அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவை: ஒன்றிய அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share