300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று (ஜூலை 10) தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இதில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது, உழவர் சந்தைகளில் காய்கறிகளை விற்பனை செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, மாநிலம் முழுவதும் செயல்படும் பண்னை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி சிறிய வெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும்,

ADVERTISEMENT

வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறையான விலையில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும். நடமாடும். காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் என்றும்,

ADVERTISEMENT

மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தக்காளி, சிறியவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இருப்பு விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு. பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

மாமன்னன் பார்த்த நரிக்குறவர் இன மக்கள்!

அன்று கலைஞர் இன்று ஸ்டாலின்: அரை நூற்றாண்டாக தொடரும் ஆளுநர் எதிர்ப்பு!

 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share