தக்காளி விலை குறைந்தது!

Published On:

| By Jegadeesh

சென்னையில் தக்காளி விலை இன்று (ஜூலை 3) குறைந்துள்ளது.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை சதமடித்திருந்தது.

அதன்படி, சென்னையில் மொத்த விற்பனை அங்காடியான கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
சில்லறை விற்பனையில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டதால், இல்லத்தரசிகள் தவிப்புக்குள்ளாகினா்.

சென்னையைப் போல கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு போன்ற பல்வேறு நகரங்களிலும் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது.

இந்நிலையில், உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை ஒரே நாளில், இன்று(ஜூலை 3) ரூ.40 வரை குறைந்து சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ. 90-க்கு விற்பனையாகி வருகிறது.

விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியாகியுள்ளனர்.

இதனிடையே, தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளிலும் தக்காளியை விற்பனை செய்வது குறித்தும் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செந்தில் பாலாஜி சகோதரருக்கு மீண்டும் சம்மன்!

சத்யபிரேம் கி கதா: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share