சுங்கச்சாவடிகளின் ஆயுள் ஓராண்டுதானாம்!

Published On:

| By Balaji

‘நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் ஓர் ஆண்டுக்குள் அகற்றப்படும். ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வாயிலாகச் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போதுதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

ADVERTISEMENT

இதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயண நேரமும் அதிகரித்தது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ‘பாஸ்டேக்’ எனப்படும் மின்னணு முறை வாயிலாகக் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

தற்போது 93 சதவிகித வாகனங்கள் பாஸ்டேக் வாயிலாக சுங்கக்கட்டணம் செலுத்திச் செல்கின்றன. மீதமுள்ள 7 சதவிகித வாகனங்கள் மட்டுமே, அபராதம் செலுத்தி சுங்கச்சாவடியைக் கடக்கின்றன. பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தாத வாகனங்களிடம் இரண்டு மடங்கு கூடுதல் தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுபோன்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வாயிலாக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று பேசியுள்ளார்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share