பங்குச் சந்தையில் புதிய உச்சம் : இன்று கவனம் செலுத்தும் நிறுவனங்கள்!

Published On:

| By Kavi

ஆகஸ்டு 29 வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது. நாள் வர்த்தகத்தில் மேலும் சென்செக்ஸ் புதிய உச்சமாக 82,285 புள்ளி வரை உயர்ந்து; வர்த்தக முடிவில் 82,134.61 புள்ளியிலும், நிஃப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 25,151.95 புள்ளியிலும் முடிவடைந்தது.

NSEல் Tata Motors, Bajaj Finserv, Britannia, Bajaj Finance, BPCL, HCL Tech, Bajaj Auto, ITC, Reliance Industries, Apollo Hospitals, Hero MotoCorp, Tech Mahindra மற்றும் Wipro உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்து உயர்வுடன் முடிவடைந்தது.

Grasim, M&M, JSW Steel, Eicher Motors, Kotak Mahindra Bank, Hindalco, Sun Pharma, Dr Reddy’s, Tata Consumer, Infosys மற்றும் Tata Steel நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்புகளை Moody நிறுவனம் அறிவித்துள்ளது. கிராமப்புற தேவை பூர்த்தி, வலுவான தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை மேம்படுத்தல் காரணமாக இந்தியாவில் GDP முந்தைய மதிப்பீட்டான 6.8% இருந்து 7.2% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.

வியாழக்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இன் தலைவர் முகேஷ் அம்பானி, ஆயில்-டு-டெலிகாம் குழுமத்தின் 47வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்கள் கூட்டத்தில் (AGM) உரையாற்றினார்.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 5 அன்று 1:1 விகிதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்க பங்குதாரர்களின் ஒப்புதலுடன் பரிசீலிக்க உள்ளதாக SEBIல் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனில் அம்பானி மற்றும் பிற முக்கிய நிர்வாகப் பணியாளர்களுக்கு எதிராக, இந்திய சந்தை கட்டுப்பாட்டுப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தண்டனை நடவடிக்கை அறிவிப்பு காரணமாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (ரிலையன்ஸ் இன்ஃப்ரா) நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடந்த ஆறு வர்த்தக நாட்களில் சுமார் 1,552 கோடிக்கு மேல் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் பங்கு கிட்டத்தட்ட 4.5 சதவீதம் சரிந்து பிஎஸ்இயில் 203.95 ரூபாயில் முடிவடைந்தது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) 2023-24 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக(டிவிடெண்ட்); நிதியமைச்சகத்துக்கு வழங்க வேண்டிய 3662.17 கோடியுடன் சேர்த்து மொத்தம் 6,103.62 கோடியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கியதாக அறிவித்துள்ளது.

டாடா குழுமத்தின் பொழுதுபோக்கு விநியோக தளமான டாடா ப்ளேயின் ஆரம்ப பொது வழங்கல் (IPO) திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை டாடா நிறுவனம் திரும்பப் பெற்றதாக பங்குச் சந்தை வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அளவில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்; தகவல் தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் GeakMinds , எரிசக்தி துறையில் இயங்கி வரும் Ohmium, நிதி தொழில்நுட்ப நிறுவனம் PayPal மற்றும் பிரபல Nokia உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆகஸ்டு 30 வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் வர்த்தகத்தில் முதல் அமர்வில் பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் 502.42 புள்ளிகள் 82637.03 இல் புள்ளியிலும்.நிஃப்டி 97.75 புள்ளிகள் அதிகரித்து 25,249.70 புள்ளியிலும் புதிய வாழ்நாள் உச்சத்துடன் தொடங்கியது.

பல்வேறு செய்திகள் காரணமாக HDFC Bank, Infosys, Tata Motors, Sugar stocks, RVNL, ITI, Jai Corp, NBCC, SpiceJet, CDSL, LIC, Lemon Tree, Tata Power, NTPC, Tata Power Reliance Industries, BPCL, ITC, Bharti Hexacom, IndiGo, PB Fintech, Prestige Estates உள்ளிட்ட நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.

-மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

ரூ.3.6 கோடி கடன்: வட்டியுடன் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு!

சென்னை, மதுரை, கோவை – 4100 பேருக்கு வேலை : ரூ.900 கோடி முதலீடுகளை ஈர்த்த ஸ்டாலின்

கோவை பிரியாணி போட்டி : ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு!

Market Prediction 30 August

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share