அமெரிக்காவில் பத்திர வருவாயின் வீழ்ச்சி காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனையை கட்டுப்படுத்தியுள்ளதன் காரணமாக உலகலாவிய பங்குச் சந்தைகள் குறைவான ஏற்ற இறக்கத்துடன் பயணித்து வருகிறது.
இந்திய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் எஃப்&ஓ மற்றும் இன்ட்ரா-டே பிரிவுகளில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதால், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவன பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த போக்கு வரும் காலத்தில் மேலும் தொடர வாய்ப்புள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் புதன்கிழமை காலை முதல் அமர்வில் 0.05% உயர்ந்து 81750 புள்ளியிலும். நிஃப்டி 0.09 சதவீதம் உயரந்து 25,039 புள்ளியிலும் தொடங்கியது.
காலை முதல் அமர்வில் M&M, Tata Motors, Bajaj Finserv நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் JSW Steel, NTPC and Ultratech Cement நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்து வருகிறது.
NBCC பங்கு போனஸ் பங்குகள் அறிவிப்பு காரணமாக புதன்கிழமை காலை முதல் அமர்வில் 7% லாபத்தைக் கொடுத்துள்ளது.
அதானி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் மதிப்பான 2.72 லட்சம் கோடியில் சுமார் 75,877 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் இயங்கி வரும் பாரத் ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, கனரா வங்கி போன்ற அரசின் வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளிடம் இருந்தும் கடன் பெற்றுள்ளதாகவும்.
வெளிநாட்டு வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாகவும், மேலும் வெளிநாட்டுக் கடனை குறைக்கும் விதமாக அதானி குழுமம் இதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
4க்கு ஒரு பங்கு என்கிற விகிதத்தில் போனஸ் அறிவித்ததைத் தொடர்ந்து Sameera Agro and Infra LTD பங்கு நேற்று செவ்வாய்க்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் 20% லாபத்தை கொடுத்தது. காலை முதல் அமர்வில் 109 ரூபாயில் தொடங்கிய வர்த்தகத்தில் 125 ரூபாய் வரை உயர்ந்தது.
அதானி எண்டர்பிரைசஸ் நிர்வாகம் வாரியம் 80,00,000 வரையிலான non–convertible debenture பத்திரங்கள் 1,000 ரூபாய் முகமதிப்பள்ள 400 கோடி மதிப்பிலான பொது வெளியீட்டிற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 400 முதல் 800 கோடி வரை ஈட்ட உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை அதானி என்டெர்பிரைசஸ் பங்கு .0.78% சரிந்து 3,043.15 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது
இன்றைய காலகட்டத்தில் மக்களின் தினசரி வாழ்க்கையில் அடிப்படை தேவையாகிவிட்ட மின்சாரம் மற்றும் மின்சாரம் உருவாக உப துறைகளாக கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு துறை சார்ந்த பங்குகள் கடந்த சில ஆண்டுகளாக அபிரித வளர்ச்சியை கண்டு.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நல்ல லாபத்தைக் கொடுத்து வருகிறது. பவர் துறையில் இயங்கி வரும் ஜெய் பிரகாஷ் பவர் வென்ச்சர் நிறுவன பங்கு கடந்த ஒரு வருடத்தில் 145% லாபத்தை கொடுத்துள்ளது.
பல்வேறு செய்திகள் காரணமாக Bajaj Finance, HDFC Life, IndiGo, Lupin, ICICI Prudential நிறுவன பங்குகள் இன்று வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…எவ்வளவு தெரியுமா?
முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… என்ன நடந்தது?
டிஜிட்டல் திண்ணை: அமெரிக்கா புறப்பட்ட ஸ்டாலின்… துரைமுருகன் ஏர்போர்ட் சென்ற பின்னணி!
மேற்கு வங்கத்தில் பாஜக பந்த்: ஹெல்மெட்டுடன் பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!