பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 -ம் தேதி வயது முதிர்வு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தனது 96 வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி , குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ட்ரஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத்தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்தனர்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக நேற்று (செப்டம்பர் 10 ) பிரிட்டனின் புதிய மன்னரானார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு இன்று ( செப்டம்பர் 11 ) ஒரு நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கடந்த 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. மேலும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் , டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்

Comments are closed.