இன்று நீண்ட நேர சந்திர கிரகணம்: எங்கே பார்க்கலாம்?

Published On:

| By Balaji

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம், நீண்ட நேரம் இன்று ஏற்படுகிறது. இது பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதை இந்தியாவில் எந்தப் பகுதியில் பார்க்கலாம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறார்கள். இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில்தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதி அளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, 21ஆம் நூற்றாண்டில் பூமி, மொத்தம் 228 சந்திர கிரகணங்களை சந்திக்கும். சந்திர கிரகணம் ஆண்டுக்கு அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே நிகழும் என்கிறது.

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணமானது இன்று ஏற்படுகிறது. இது பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பகுதி சந்திர கிரகணத்தின் காலம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 விநாடிகள் நிகழ்கிறது.

ADVERTISEMENT

இந்த நிகழ்வு முழுவதுமாக நடைபெறுவதற்கு 6 மணி 1 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இது கடந்த 580 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக நீண்ட நேரம் நிகழக்கூடிய ஒன்றாகும்.

இந்த பகுதி சந்திர கிரகணத்தை மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளில் உள்ளவர்கள் காண முடியும்.

ADVERTISEMENT

இந்தியாவில் பிற்பகல் 2.34 மணிக்குத் தொடங்கும் இந்த அரிய நிகழ்வினை, வானிலை தெளிவாக இருந்தால் இதனை அருணாசல பிரதேசம், அசாமின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கிரகணத்தின் இறுதி நிகழ்வினை காணலாம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

**-ராஜ்**

.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share