தங்கம் விலை இன்றும் உயர்வு!

Published On:

| By Kavi

தங்கம் விலை தினசரி உயர்ந்து வருகிறது. நேற்று ரூ.192 அதிகரித்த நிலையில் இன்று (ஜூலை 26) சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது.

பொருளாதார சரிவு காரணமாக சமீப நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்துக்கான டிமாண்ட் முன்னெப்போதும் விட அதிகமாகவே இருக்கிறது. தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தச்சூழலில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,760ஆகவும், கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.4,728 ஆகவும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40,040 ரூபாயாகவும், கிராமுக்கு 5,130 ரூபாயாகவும் உள்ளது.

ADVERTISEMENT

ஜூலை 23ஆம் தேதி 128 ரூபாயும், 24ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லை, 25ஆம் தேதி 192 ரூபாயும், இன்று 64 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் 384 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதுபோன்று தங்கம் உயர்ந்து வருவதால் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

ADVERTISEMENT

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share