ADVERTISEMENT

இன்றே கடைசி நாள்.. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Mathi

Income Tax Return

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு இன்று (செப்டம்பர் 15) கடைசி நாள். இன்றுடன் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவை இல்லை. அடுத்த நிதி ஆண்டு முதல் ஆண்டு வருமானம் ரூ12 லட்சம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த தேவை இல்லை.

ADVERTISEMENT

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய ஜூலை 31 அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இது இன்று செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share