தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 4) அதிரடியாக குறைந்துள்ளது. Today gold rate chennai
இந்த மாத இறுதியில் அக்ஷய திருதியை வருகிறது. இதையொட்டி நகை பிரியர்கள் தங்கம் வாங்க பணத்தை சேமித்து வைத்து வருகின்றனர்.
ஆனால் நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. ஒரு சவரன் ரூ.68,480-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200 விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ரூ.160 குறைந்து ரூ.8,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.