தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று (அக்டோபர் 28) தங்கம் விலை இறங்கியிருப்பது நகைபிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 45 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 360 ரூபாயும் குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 7,315 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் விலை ரூபாய் 360 குறைந்து 58,520ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 7,825ரூபாய்க்கும், ஒரு சவரன் 62,600ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ விலை 1,07,000ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா