தங்கம் விலை இன்று (ஜூன் 12) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. today gold and sliver price
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தங்கம் விலை 74 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1,19,000க்கும் விற்பனையாகிறது. today gold and sliver price