ADVERTISEMENT

WEATHER: இன்று 8.. நாளை 20 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் வடகிழக்கு பருவமழை!

Published On:

| By Mathi

Rain Chennai

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிகின்றன.

ADVERTISEMENT

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

கன்னியாகுமரி
நெல்லை
தென்காசி
தேனி
திருப்பூர்
ஈரோடு
கோவை
நீலகிரி

ADVERTISEMENT

ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த 24 மணிநேரத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக் கூடும்; வரும் 21-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தீபாவளி நாளில் (அக்.20)-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள 20 மாவட்டங்கள்:

செங்கல்பட்டு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
நாகை
திருவாரூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம்
மதுரை
விருதுநகர்
திண்டுக்கல்
கரூர்
நாமக்கல்
திருப்பூர்
ஈரோடு
கோவை
நீலகிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share