எஸ்.ஐ வேலைக்கு எவ்வளவு மார்க் வேணும்? 1299 காலியிடங்கள்… ‘கட்-ஆஃப்’ கணிப்பு இதோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

TNUSRB SI posts exam expected cut off

“காக்கிச் சட்டை கனவுல இருக்கேன்… ஆனா கட்-ஆஃப் எவ்வளவு வரும்னு தெரியாம ஒரே பதட்டமா இருக்கு” என்று புலம்பும் எஸ்.ஐ தேர்வர்களே… ரிலாக்ஸ்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்துள்ள 1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், “எவ்வளவு மார்க் எடுத்தா நாம சேஃப்?” என்ற கேள்விக்கான விடை இதோ.

ADVERTISEMENT

இந்த ஆண்டு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், கட்-ஆஃப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் நிலவரம் என்ன?

ADVERTISEMENT

மொத்தமுள்ள 1,299 பணியிடங்களில்,

  • தாலுகா (Taluk) எஸ்.ஐ: 800+ இடங்கள் (இதுதான் இருப்பதிலேயே அதிகம்).
  • ஆயுதப்படை (AR): 300+ இடங்கள்.
  • தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP): 100+ இடங்கள் உள்ளன.

கட்-ஆஃப் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

ADVERTISEMENT

எழுத்துத் தேர்வு மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்தான் உங்களை அடுத்தக்கட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு (Physical Test) அழைத்துச் செல்லும். வினாத்தாளின் கடினத் தன்மை மற்றும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்-ஆஃப் மாறுபடும்.

எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் (Expected Cut-off):

கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கணிப்புப்படி, 70-க்கு இந்த மதிப்பெண்களை இலக்காக வைப்பது நல்லது:

  • பொதுப் பிரிவு (General): ஆண்கள் 58-60+ | பெண்கள் 55-58+
  • பிற்படுத்தப்பட்டோர் (BC): ஆண்கள் 56-58 | பெண்கள் 52-55
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC/DNC): ஆண்கள் 56-58 | பெண்கள் 52-55
  • எஸ்சி (SC): ஆண்கள் 54-56 | பெண்கள் 50-53
  • எஸ்சி (அருந்ததியர்): ஆண்கள் 50-53 | பெண்கள் 48-50
  • எஸ்டி (ST): ஆண்கள் 48-52 | பெண்கள் 45-48

யாருக்கு முன்னுரிமை?

எழுத்துத் தேர்வில் அதிக மார்க் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் உடல் தகுதித் தேர்வு (15 மார்க்) மற்றும் நேர்காணல் (10 மார்க்). என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ் (NSS) மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக 5 சிறப்பு மதிப்பெண்கள் கிடைக்கும். இதுதான் பல நேரங்களில் ‘கேம் சேஞ்சர்’ ஆக அமையும்.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இம்முறை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகம். டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 படிக்கும் மாணவர்களும் எஸ்.ஐ தேர்வை எழுதுவதால் போட்டி கடுமையாக இருக்கும். 60 ப்ளஸ் (60+) மார்க் எடுத்துவிட்டால், நீங்கள் பாதி கிணற்றைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், உண்மையான வெற்றி ‘பிசிக்கல் டெஸ்ட்’டில் தான் இருக்கிறது. அங்கு ஒரு ஸ்டார் மிஸ் ஆனாலும் வேலை பறிபோகும் அபாயம் உண்டு. அதனால் கிரவுண்ட் பிராக்டிஸை இப்போதே தொடங்குவது புத்திசாலித்தனம்!.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share