சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. tnstc run special buses for week end
மே 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள், மே 24ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 25ம் தேதி (ஞாயிறுக்கிழமை) வார விடுமுறை வருகிறது.
இதனால் உறவினர் வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், வார விடுமுறையை குடும்பத்தோடு கொண்டாடவும் பலரும் தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 570 பேருந்துகளும், சனிக்கிழமை 605 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 100 பேருந்துகளும், நாளை மறுநாள் 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கப்படவுள்ளன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
மாதவரத்திலிருந்து நாளை 24 பேருந்துகளும், நாளை மறுநாள் 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுவுள்ளன.
ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. tnstc run special buses for week end