தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 27-ஆவது தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று(ஆகஸ்ட் 23) பதவியேற்றார்.
தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் முகமையாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆணையத்தின் 26-ஆவது தலைவரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் ஜூன் 9, 2022 ஆண்டு ஓய்வு பெற்றார். அதற்குப் பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழக பணியாளர் தேர்வாணையம் முழு நேரத் தலைவர் இல்லாமல்தான் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில், எஸ்.கே பிரபாகரைத் தமிழக பணியாளர் தேர்வாணையத்தின் 27-ஆவது நியமித்தது.
அதைத் தொடர்ந்து எஸ்.கே.பிரபாகர் இன்று பதவியேற்றார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் குறித்துச் சரியான தகவல்களை விடத் தவறான தகவல்கள் வேகமாக மக்களைச் சென்றடைகிறது. அதனை தடுக்க டிஎன்பிஎஸ்சி இனி வெளிப்படையாக இருக்கும். தேர்வு அறிவிப்புகள், முடிவுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்படும். குற்றச்சாட்டுகள் ஏதேனும் எங்களது கவனத்திற்கு வந்தால் நாங்கள் அது சம்பந்தமான விளக்கத்தை உடனுக்குடன் தெரிவிப்போம்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் பல கட்டங்கள் உள்ளன, அந்த ஒவ்வொரு கட்டங்களையும் மேம்படுத்தி, இனி வரும் காலங்களில் எதிலும் கால தாமதம் ஏற்படாதவாறு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எஸ்.கே.பிரபாகர் பதிலளித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 1989-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு முன் இவர் வருவாய் நிர்வாகத் துறை ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மேலும் சரிந்தது தங்கம் விலை…செம்ம வாய்ப்பு!
தவெக கொடி சர்ச்சை : விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார்!
Diamond League 2024: லோசானில் நீரஜ் சோப்ரா 2வது இடம்… இறுதிப்போட்டிக்கு செல்வாரா?