குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6,724-லிருந்து 8,932 இடங்களாக அதிகரித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (அக்டோபர் 9) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பாக அரசு துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், 6,244 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 5.8 லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள். இதனையடுத்து, குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, கடந்த மாதம் குரூப் 4 காலிப்பணியிடங்கள் 6244-லிருந்து 6,724-ஆக உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், இன்று 2,088 காலிப்பணியிடங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, 8,932-ஆக உயர்ந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘ஸ்னேக்ஸ் அண்டு லாடர்ஸ் ’
ஆசிரியர்கள் போராட்டம்: ஊதியம் விடுவிக்கப்படும்… உதயநிதி உறுதி!