தமிழகம் முழுவதும் ஜூலை 12-ந் தேதி சனிக்கிழமையன்று TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
TNPSC குரூப் 4 பணியிடங்களில் 3,935 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிசி தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியது. இதையடுத்து ஹால்டிக்கெட் வெளியானது. விண்ணப்பித்த மாணவர்கள் தற்போது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 12ந் தேதி சனிக்கிழமை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் – 215 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் – 1,621 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் – 11 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் – 46 காலியிடங்கள், ஜூனியர் வருவாய் ஆய்வாளர் – 239 காலியிடங்கள், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) – 1 காலியிடம், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் – 2 காலியிடங்கள்,தட்டச்சர் – 1,100 காலியிடங்கள், ஸ்டெனோ டைப்பிஸ்ட் (கிரேடு – III) – 368 காலியிடங்கள், தனிப்பட்ட எழுத்தர் – 2 காலியிடங்கள், உதவியாளர் – 54 காலியிடங்கள், கள உதவியாளர் – 19 காலியிடங்கள், வனக் காவலர் – 62 காலியிடங்கள், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர் – 35 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் – 71 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் (பழங்குடி இளைஞர்) – 24 காலியிடங்கள், வனக் காவலர் – 15 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்), வனக் கண்காணிப்பாளர் – 50 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்) என மொத்தம் 3,935 காலி
பணியிடங்களுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.
இந்த நிலையில் 13,89,738 பேருக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. அதாவது காலியாக உள்ள ஒரு பணியிடத்திற்கு 353 பேர் தேவு எழுதுகின்றனர்.
ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன.
அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அனைத்து தேர்வர்களும் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்; காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.










