காத்திருந்தது போதும்… குரூப் 2 ரிசல்ட் வந்தாச்சு! மெயின்ஸ் தேர்வுக்குத் தேர்வானவர்கள் யார்? லிஸ்ட் இதோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

TNPSC group 2 prelims exams results released

“எப்படா ரிசல்ட் வரும்… தீபாவளி முடிஞ்சுடுச்சு, பொங்கலும் வரப்போகுது, இன்னும் காணோமே?” என்று சோஷியல் மீடியாவில் மீம்ஸ் போட்டுத் தவித்துக்கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு, இதோ ஒரு ‘கூல்’ செய்தி. லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ (Group 2 & 2A) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வாணையத்தின் இணையதளம் பக்கம் ஒரே நேரத்தில் எல்லோரும் படையெடுப்பதால், சர்வர் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், முடிவுகளைத் தெரிந்துகொள்ளத் தேர்வர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ADVERTISEMENT

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் பதட்டப்படாமல் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றித் தங்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்:

ADVERTISEMENT
  • முதலில் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Latest Results’ அல்லது ‘What’s New’ பகுதியில், குரூப் 2 தேர்வு முடிவுக்கான லிங்க் (Link) கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதை கிளிக் செய்தால், முதன்மைத் தேர்வுக்கு (Mains) தகுதி பெற்றவர்களின் பதிவெண்கள் (Register Numbers) கொண்ட பிடிஎஃப் (PDF) கோப்பு ஓப்பன் ஆகும்.
  • அதில் உங்கள் பதிவெண் இருக்கிறதா என்பதை ‘Ctrl+F’ கொடுத்துத் தேடிப் பார்த்துக் கொள்ளலாம்.

மெயின்ஸ் எப்போது?

முதல்நிலைத் தேர்வில் (Prelims) வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வு (Mains) காத்திருக்கிறது.

ADVERTISEMENT
  • இதற்கான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
  • பொதுவாக ரிசல்ட் வந்ததில் இருந்து, மெயின்ஸ் தேர்வுக்குத் தயாராகக் குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் அவகாசம் கிடைக்கும்.

சான்றிதழ் பதிவேற்றம்:

தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், முதன்மைத் தேர்வு எழுதுவதற்குத் தங்களின் அசல் சான்றிதழ்களை (Original Certificates) அரசு இ-சேவை மையங்கள் (eSeva Centres) மூலமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான தேதிகள் மற்றும் கட்டண விவரங்கள் தனி அறிவிப்பாக வெளியிடப்படும்.

முதல் ரவுண்டு ஜெயிச்சுட்டோம்னு ரிலாக்ஸா இருந்துடாதீங்க. குரூப் 2-வ பொறுத்தவரைக்கும் மெயின்ஸ் தேர்வுதான் உண்மையான சவால். அப்ஜெக்டிவ் டைப் (Objective Type) முடிந்து, இனி விரிவாக எழுதுவது (Descriptive) என்பதால், இப்போதிருந்தே எழுத்துப் பயிற்சியைத் தொடங்குவது புத்திசாலித்தனம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share