குரூப் 2 மெயின்ஸ் தேர்வர்களே… ஹால் டிக்கெட் வந்தாச்சு! “இனி ஆட்டம் சூடு பிடிக்கும்!” டவுன்லோட் செய்வது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

tnpsc group 2 mains hall ticket 2026 download link exam tips

“பிரிலிம்ஸ் பாஸ் பண்ணியாச்சு… மெயின்ஸ்க்கு படிச்சு படிச்சு கண்ணு பூத்துப்போச்சு… எப்போதான் வரும் ஹால் டிக்கெட்?” என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த தேர்வர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஒரு ‘ஸ்வீட்’ நியூஸ் சொல்லியிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மைத் தேர்வு (Mains Exam) நுழைவுச்சீட்டை (Hall Ticket) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. “இனி ஓயுறதுக்கு நேரமில்லை பாஸ்… களத்துல இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சு!”

ADVERTISEMENT

தேர்வு எப்போது? பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த முதன்மைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வாணையம் உறுதிப்படுத்தியுள்ளது. காலை மற்றும் மதியம் என இரண்டு ஷிப்டுகளாகத் தேர்வுகள் நடைபெறும். (தேதி மற்றும் நேரத்தைத் துல்லியமாக ஹால் டிக்கெட்டில் பார்த்துக்கொள்ளவும்).

டவுன்லோட் செய்வது எப்படி? வழக்கம் போல சும்மா ரெஜிஸ்டர் நம்பரைப் போட்டால் வராது. உங்களின் ஒருமுறைப் பதிவு (OTR – One Time Registration) டேஷ்போர்டு வழியாகத் தான் எடுக்க முடியும்.

ADVERTISEMENT
  1. முதலில் tnpsc.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
  2. அதில் ‘Hall Ticket Download’ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  3. அது உங்களை OTR பக்கத்திற்குக் கொண்டு செல்லும்.
  4. அங்கே உங்கள் ‘Login ID’ மற்றும் ‘Password’ கொடுத்து உள்ளே நுழையவும்.
  5. டேஷ்போர்டில் “Group II / IIA Services Mains Hall Ticket” என்று இருக்கும். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.

முக்கிய அலர்ட்: கடைசி நேரத்தில் “பாஸ்வேர்ட் மறந்து போச்சே”, “ஓடிபி வரலையே” என்று பதறாதீர்கள். இன்றே டவுன்லோட் செய்து, அதில் உங்கள் பெயர், புகைப்படம், தேர்வு மையம் (Exam Centre) எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

மெயின்ஸ் தேர்வுங்கிறது சாதாரண விஷயம் இல்ல. இது ‘டிக்’ அடிக்கிற தேர்வு கிடையாது; பக்கம் பக்கமா எழுதித் தள்ளுற தேர்வு! கை வலிக்க எழுதினாதான் அரசு வேலை கிடைக்கும். ஹால் டிக்கெட்டை எடுத்த கையோடு, தேர்வு மையம் எங்க இருக்குனு ஒரு விசிட் அடிச்சிடுங்க. புதுசா பேனா வாங்காம, இதுவரைக்கும் பிராக்டீஸ் பண்ண அதே பேனாவை எக்ஸாமுக்குக் கொண்டு போங்க. கையெழுத்து முத்து முத்தா இருக்கணும்னு அவசியமில்ல, திருத்துறவங்களுக்குப் புரிஞ்சா போதும். இதுதான் உங்க வாழ்க்கையைத் தீர்மானிக்கிற கடைசி படி. கலக்குங்க!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share