ADVERTISEMENT

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது?

Published On:

| By indhu

TNPL series starting on 5th July!

8-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

டி.என்.பி.எல். லீக் போட்டிகள் ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரை கோவையிலும், ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26 முதல் 28ஆம் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.

குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதிகளில் திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்ட் 2 மற்றும் 4-ஆம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

ADVERTISEMENT

போட்டிகள் அனைத்தும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஒரு ஆட்டம்  தொடங்கும்.

இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி விளக்கம்!

விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது: ஜெயக்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share