தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் இன்று (ஜூன் 13) நடைபெறும் 2 வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகளை போல தமிழகத்தில் நடத்தப்படும் போட்டிகள் தான்(Tamil Nadu Premier League) தமிழ்நாடு ப்ரீமியர் லீக்.
இந்த போட்டிகளில் விளையாடி தங்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த தொடர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகிறது. நேற்று (ஜூன் 12) தொடங்கிய இந்த தொடரில் கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் களம் இறங்கின இதில் கோவை கிங்ஸ் அணி வெற்றியுடன் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் பற்றிய ஒரு தொகுப்பை இங்கே காணலாம்:
இந்த 7 வது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் சீசனில் மொத்தம் 8 அணிகள் பங்கு பெறுகின்றன. அவை,சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகும்.
நேற்று தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும்.
இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 60 லட்சமும், அரையிறுதி வரை சென்று தேல்வியடைந்த அணிக்கு 40 லட்சமும், பங்கேற்ற அணிகளுக்கு 25 லட்சமும் வழங்கப்படும்.
அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உள்ளது. அந்த அணி இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டி மழையால் பாதியில் ரத்தானதால் கோவை கிங்சுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மொத்தம் 28 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், முதல் தகுதி சுற்றுக்கு முன்னேறும். அதில் ஜெயிக்கும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும்.
தோற்கும் அணி தகுதி சுற்று 2 இல் எலிமினேட்டர் சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். 2 வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள அணியுடன் மோதும்.
அதன்படி , இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இரவு. 7.15 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள்
கெளசிக் காந்தி(கேப்டன்) , முகமது ஆதன் கான், ரஜேந்திரன் கார்த்திகேயன், ஆர்.எஸ். மோகித் ஹரிகரன், எஸ்.அபிசேக், எஸ். அரவிந்த், கெளரி சங்கர், மான் பப்னா, ஆர்.பிரசாந்த், சன்னி சந்து, அமித் சாத்விக்,
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்
ஆர்.சிபி, ராஜகோபால் சதீஸ் , எஸ். சந்தோஸ் , சஞ்சய், உத்திர சாமி சசிதேவ், பி. அய்யப்பன், பாபா அப்ரஜித்(கேப்டன்), ஹரிஸ் குமார், லோகேஸ் ராஜ், மதன் குமார், நாரயண் ஜெகதீசன்,சிலம்பரசன், விஜு அருள், ரகில் ஷா, ராக்கி , ரஞ்சன்
மு.வா.ஜெகதீஸ் குமார்
