8ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருந்தா போதும்… சென்னையில் அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

tnpesu recruitment 2026 driver office assistant jobs chennai

“படிப்பு பெருசா இல்லையே… நமக்கு ஏத்த மாதிரி ஒரு நிரந்தரமான கவர்மெண்ட் வேலை கிடைக்குமா?” என்று ஏங்கும் இளைஞர்களுக்கு இதோ ஒரு அருமையான வாய்ப்பு.

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. “டிகிரி முடித்தவர்களுக்கு மட்டும் தான் வேலையா? எங்களுக்கும் இல்லையா?” என்று கேட்பவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்!

ADVERTISEMENT

என்னென்ன வேலைகள்?

பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

ADVERTISEMENT

ஓட்டுநர் (Driver):

  • காலியிடங்கள்: 2
  • கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதல் தகுதி: லைட் வெகிக்கிள் (LMV) ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட முன் அனுபவம் அவசியம்.

அலுவலக உதவியாளர் (Office Assistant):

ADVERTISEMENT
  • காலியிடங்கள்: 3
  • கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

இது தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகம் என்பதால், அரசு விதிகளின்படி நல்ல சம்பளம் கிடைக்கும்.

  • டிரைவர்: ரூ.19,500 – ரூ.62,000 (Level 8).
  • அலுவலக உதவியாளர்: ரூ.15,700 – ரூ.50,000 (Level 1).

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பம்: www.tnpesu.org என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யுங்கள்.
  • கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதை “The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai” என்ற பெயரில் டிடி (DD) ஆக எடுக்க வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், டிடி மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து, “The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur, Chennai – 600 127” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி:

உங்கள் விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 20, 2026 மாலை 5.00 மணிக்குள்.

வேலை சின்னதுனு நினைக்காதீங்க… உள்ளே போயிட்டா லைஃப் செட்டில்!

  • நிரந்தர வேலை: இது கான்ட்ராக்ட் வேலை இல்லை, ரெகுலர் போஸ்டிங். அதனால் சம்பளம் மற்றும் சலுகைகள் அரசு ஊழியர்களுக்கு இணையானது.
  • போட்டி குறைவு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அளவுக்கு இதில் போட்டி இருக்காது. சரியான முறையில் விண்ணப்பித்தால் வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.
  • அனுபவச் சான்றிதழ்: டிரைவர் வேலைக்கு அப்ளை செய்பவர்கள், 2 வருட அனுபவச் சான்றிதழை மறக்காமல் இணைக்கவும். அதில் தான் பலரும் சறுக்குவார்கள்.

நேரம் குறைவாக உள்ளது. இன்றே டிடி எடுத்து தபால் அனுப்புங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share